கருணாநிதி, ஜெயலலிதா இடஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை : ஸ்டாலின்

  முத்து   | Last Modified : 08 Jul, 2019 06:53 pm
kamaraj-anna-karunanidhi-jayalalithaa-never-compromised-on-reservation

காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இடஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை. பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று, 10% இடஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘சுதந்திர இந்தியாவில் 14 பிரதமர்கள் சமூக நீதி இடஒதுக்கீட்டை காப்பாற்றியிருக்கிறார்கள். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அரசியல் சாசனம் வழங்கிய உரிமை பறிக்கப்பட தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. மருத்துவ படிப்பில் 25% தருகிறோம் என்பதை நம்பி 10% இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close