10% இடஒதுக்கீடு: எத்தனை கட்சிகள் ஆதரவு? எதிர்ப்பு?

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 10:00 pm
10-reservation-how-many-parties-supported

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பும், 5 கட்சிகள் ஆதரவும் அளித்துள்ளன.

சென்னையில் இன்று 10% இடஒதுக்கீடு தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் இன்றிரவு 9 மணியளவில் நிறைவடைந்தது.

இந்த கூட்டத்தில், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் 10% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக, திராவிடர் கழகம், மக்கள் நீதி மய்யம், மதிமுக, இந்திய  கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close