காதல் என்ற பெயரில் கூட்டு பாலியல் வன்கொடுமை: 10 பேர் கைது

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 09:16 am
joint-sexual-harassment-in-the-name-of-love-10-arrested

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபுவை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் செய்வதாக கூறி அமானுல்லா அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு தனது நண்பர்களிடம் கூறி, அவர்களுடனும் அந்த பெண்ணை மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். 

தொடர்ந்து அமானுல்லா உட்பட 10 பேரும் சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் சித்ரவதை தாங்க முடியாத சிறுமி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த 5ஆம் தேதி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில், அமானுல்லா, பகவதி, முகமது அலி, டேவிட் செந்தில், முகமது ரபிக், அருண் நேரு, சையது முகமது, இர்ஷாத் முகமது, இர்ஷாத் பாட்சா ஆகிய 9 பேரை கடந்த 6ஆம் தேதி கைது செய்தனர். 

மேலும் தலைமறைவாக இருந்த பிரபு என்பவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து 10 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close