மாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 11:54 am
vaiko-s-nomination-accepted

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்துள்ள வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2019 மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக கட்சிக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தலா ஒரு இடம் வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். திமுக சார்பில் தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

மேற்குறிப்பிட்ட மூவருமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டுத் தண்டனை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது மனு ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்று பலர் கருத்துக்கள் கூறிவந்த நிலையில், இன்றைய வேட்புமனு பரிசீலனையில், மதிமுக பொதுச் செயலர் வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close