பாதிப்பு இல்லையெனில் 10% இட ஒதுக்கீடு ஏற்பு: ஓ.பி.எஸ்

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 12:23 pm
10-reservation-acceptance-if-not-affected-other-caste-ops

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார். அப்போது, 10 சதவீத இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோருக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால், 10 சதவீத இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அதே நேரத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அது நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு இல்லாத வகையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.  

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close