3 மீன் பிடி துறைமுகங்கள் : பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 01:32 pm
3-fishing-ports-announced-by-chief-minister

விழுப்புரம், காஞ்சிபுரத்தில் ரூ. 210 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ரூ.64.35 கோடி செலவில் இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கப்படும் என்றும் இத்திட்டத்தை செயல்படுத்த தனிக்குழு அமைக்கப்படும் என்றும் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

மேலும், விழுப்புரம், காஞ்சிபுரத்தில் ரூ. 210 கோடி மதிப்பீட்டில் 2 மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும், ஆறுக்காட்டுத்துறையில் ரூ.150 கோடி செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பெரியதாழையில் மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கருங்கற்கள் மற்றும் கான்கிரீட் கற்களால் அலைகளின் வீச்சை தடுக்கும் வகையில் தடுப்புசுவர்  அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும், 2.5 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.24 கோடியில் காப்பீடு செய்து தரப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close