7 பேர் விடுதலை விவகாரம் - முதலமைச்சர் விளக்கம்

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 02:38 pm
7-people-released-chief-minister-s-explanation

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு ஆளுநரிடம் வலியுறுத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பி வந்த நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார். 

அதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும்   எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், முக ஆட்சியில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என ஆளுநருக்கு கடிம் அனுப்பியதை சுட்டிக்காட்டிய அவர்,  சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும் அதனால் ஒருவரை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close