ஆணவப் படுகொலைகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள்? - நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 04:07 pm
madras-hc-investigation-about-honour-killing

ஆணவப்படுகொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆணவப் படுகொலைகள் தொடர்பாக வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் பேசும்போது, "மக்கள் இருக்கும் சாதாரண அமைப்புகள் முதல் மக்களின் பிரதிநிதிகள் இருக்கும் சட்டப்பேரவை வரை சாதிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆணவப் படுகொலைகளை தடுக்க வேண்டும் என்று கூறும் கட்சிகளே சாதியை வளர்த்துவிடும்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களில் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. 

இதையடுத்து, ஆணவப் படுகொலைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதுவரைஎன்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  வழக்கு ஜூலை 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close