கார் - வேன் மோதல்: ஒரு பெண் உள்பட 3 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 04:24 pm
car-van-collision-3-people-including-a-woman-killed

பொள்ளாச்சி அருகே இன்று ஆம்னி கார், மினி வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உடுமலையில் இருந்து கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த கார் கோலார்பட்டி சுங்கம் பகுதியில் எதிரே வந்த மினி வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close