சரவண பவன் ராஜகோபால் போலீசில் சரணடைந்தார்!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 04:50 pm
saravana-bhavan-owner-rajagopal-surrendered-in-police

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் இன்று மாலை 4 மணியளவில்  போலீசாரிடம் சரணடைந்தார். 

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ராஜகோபாலின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், கடந்த மார்ச் 29ம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த கொலையில் தொடர்புடைய டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை சிறைத்த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. 

இதில், ராஜகோபால் தவிர 9 பேர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். உடல்நிலையை காரணம் காட்டி சரணடைய கால அவகாசம் கோரி, ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவர் உடனடியாக போலீசாரிடம் சரணைடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. 

இதையடுத்து, சென்னை விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால், இன்று மாலை 4 மணியளவில் போலீசாரிடம் சரணடைந்தார். 

newstm.in 

சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை! வழக்கின் முழு விபரம் உள்ளே...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close