தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 08:11 pm
rain-in-various-parts-of-tamil-nadu

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, மத்திகிரி, பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டம் அவிநாசி, திருமுருகன்பூண்டி, பழங்கரை, காசிகவுண்டன்புதூர் பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், அழகியமண்டபம், தக்கலை, குளச்சல் பகுதிகளிலும், மதுரை மாவட்டம் மேலூர், ஆட்டுக்குளம், சூரக்குண்டு, சுக்காம்பட்டி, நாவினிப்பட்டி பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பொன்னமவராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close