தயிருக்கு ஜிஎஸ்டி வசூலா? !... கொடு ரூ.10,000 அபராதம்

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 10:01 pm
curd-gst-imposed-a-fine-of-rs-10-000-consumers-ordered-grossing-restaurant

நெல்லை, பாளையங்கோட்டையில் தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்த உணவகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள உணவகம் தயிருக்கு 2 ரூபாயை ஜிஎஸ்டியாக வசூலித்ததாக வாடிக்கையாளர் மகாராஜன்  நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்ததற்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கில், மனுதாரரின் மன உளைச்சலுக்கு ரூ.10,000, வழக்கு செலவுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பால், தயிர், காய்கறி போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என்ற போதும், ஜிஎஸ்டி வசூலித்ததால் நுகர்வோர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close