அமமுக கட்சி உதிர்ந்து வருகிறது: தமிழிசை

  அனிதா   | Last Modified : 10 Jul, 2019 09:52 am
ammk-party-is-coming-loss-tamilisai

டிடிவி தினகரன் கட்சி கொஞ்சம், கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடாக முதலமைச்சர் குமாரசாமி கூறுவது ஆரோக்கியமானது தான் என்றும், பதவி பறிபோய்விடுமோ என்தால் கூறுகிறாரா என்று தெரியவில்லை எனவும் கூறினார். 

மேலும், தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுதர கூட்டணி கட்சிகளும் வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், காவிரி விவகாரத்தில் கூட்டணி கட்சி என்று வரும் போது ஸ்டாலின் வாய் திறப்பதே இல்லை என குற்றம் சாட்டினார். டிடிவி தினகரன் கட்சி கொஞ்சம், கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருப்பதாகவும் தமிழிசை சௌந்தராஜன் குறிப்பிட்டார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close