அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை; திமுகவினர் வெளிநடப்பு!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 12:02 pm
dmk-law-makers-walks-out-of-assembly

நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிப்பு குறித்து அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுகவினர் அவை வெளிநடப்பு செய்தனர். 

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக திமுக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. 

இதன் மீதான காரசார விவாதத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மோதிக்கொண்டனர்.

ஸ்டாலின்: தமிழகத்தில் 19 மாதங்களுக்கு முன்னதாகவே நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில்  தகவல் தெரிவித்தது. இதுவரை ஏன் சட்டப்பேரவையில் தகவல் தெரிவிக்கவில்லை? நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக அரசு மறைத்து விட்டது. 

சி.வி.சண்முகம்: நீட் விலக்கு மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர நிராகரிக்கப்படவில்லை. எனவே கண்டிப்பாக நீட் விலக்கு அளிக்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்கும். 

முதலமைச்சர்: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசையும் அணுகுகிறோம். சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளார். 

அமைச்சர் மற்றும் முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் அவை வெளிநடப்பு செய்தனர். 

newstm.in

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு! - மத்திய அரசு தகவல்

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close