தமிழகத்தில் 3 புதிய சட்டக்கல்லூரிகள்: முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 12:59 pm
cm-edappadi-palanisamy-announcement-for-3-new-law-colleges

தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் சட்டக்கல்லூரி என மொத்தம் 14 சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை விதி 110ன் கீழ் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close