மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் கடிதம்!

  அனிதா   | Last Modified : 10 Jul, 2019 03:29 pm
chief-minister-s-letter-to-central-ministers

மேகதாது அணை திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்க கூடாது என மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஆகியோருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

அதில், ஜூலை 19ஆம் தேதி நடைபெறும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்றும், தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்க கூடாது எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close