தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 04:29 pm
section-144-implemented-in-thoothukudi

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் 309-வது பிறந்தநாள் விழா நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து விழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் இருக்க, இன்று மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். 

அதே நேரத்தில், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், மக்களுக்குத்தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close