நீட் தேர்வு நடந்தே தீரும்: இல.கணேசன்

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 09:31 am
neet-examination-will-be-held-ila-ganeshan

நீட் தேர்வை பாஜக ஆதரிப்பதாகவும், நீட் தேர்வு நடந்தே தீரும் எனவும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தற்கொலைகளை மட்டுமே காரணம் காட்டி நீர் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்புடையதல்ல என்றும், நீட் தேர்வை பாஜக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஏழை மாணவர்கள் நீட் தேர்வால் பயனடைகிறார்கள் என தெரிவித்த அவர், நீட் தேர்வு நடந்தே தீரும் என திட்டவட்டமாக கூறினார்.

அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் மோசமான தோல்வியடையும் என தெரிந்து தான் ராகுல் ராஜினாமா செய்துவிட்டதாக கூறிய இல.கணேசன், 
எதிர்காலம் இல்லாத கட்சியில் தொண்டர்கள் எப்படி இருப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close