நான் விளையாடியிருந்தால் இந்திய கிரிக்கெட் அணி வென்றிருக்கும்: அமைச்சர்

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 10:25 am
indian-cricket-team-would-have-won-if-i-had-played-minister

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால், நீட் விவகாரத்தில் தூங்குவது போல் நடிக்கு திமுகவை எழுப்ப முடியாது என தெரிவித்தார். ‘

நீட் தேர்விற்கு காரணமே திமுக, காங்கிரஸ் தான் என்றும், யார் நடிக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் எனவும் அவர் கூறினார். மேலும், திமுக ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்பட்டன என்றும், இழந்த உரிமைகளை அதிகமுக அரசு மீட்டு வருவதாகவும் தெரிவித்தார். டெல்லிக்கு பாத பூஜை செய்து குடும்பத்திற்காக திமுக பதவியை பெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டது போல, அரையிறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நான் விளையாடியிருந்தால் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றிருக்கும் என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்திய அணியும், அதிமுகவும் தோல்வியில் இருந்து மீண்டு வரும் என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close