நாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம்: முதலமைச்சர்!

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 12:57 pm
drinking-water-supply-from-jolarpettai-tomorrow-chief-minister

நாளை முதல் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், நாளை முதல் ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு சென்னையில் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் ஒரு நடைக்கு 25 லட்சம் லிட்டர் வீதம் 4 நடைக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டப்படுள்ளது. நேற்றைய தினம் ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை வெற்றியடைந்த நிலையில், நாளை முதல் சென்னையில் ஜோலாட்பேட்டையிருந்து கொண்டு வரப்படும் குடிநீர் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close