தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 04:18 pm
cm-edappadi-palanisamy-announcement-as-per-act-110

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கிராமப்பகுதியில் ரூ.634 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததாவது:

அம்பத்தூர், செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், பெரம்பலூர், கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் "புதிய தொழிற்பிரிவுகள்" ரூ.44.19 கோடியில் தொடங்கப்படும்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சிப்காட் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராம பகுதியில் 634 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close