முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' இணையதளம்!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 04:40 pm
yathoom-oore-website-will-be-created

தொழில் துறையில் முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' என்ற இணையதளம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று முதலமைச்சர் எட்ப்பாடி பழனிச்சாமி பேரவை விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், 'தொழில் வளர் தமிழகம்' என்ற அடையாளத்துடன் கூடிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டுகளிலும் தொழில் நிகழ்ச்சிகள் நடத்த வழிவகை செய்யப்படும். 

அதேபோன்று உலகம் முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் சேர்ந்து முதலீடுகளை அதிகரிக்க  'யாதும் ஊரே' என்ற இணையதளம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும்' என்று அறிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close