வேண்டும்.... வேண்டும்....நடமாடும் டாஸ்மாக் கடைகள் வேண்டும்: எம்எல்ஏ கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 09:09 pm
require-mobile-tasmac-shops-mla-thaniyarasu-request

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனியரசு எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். 

கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மது பிரியர்கள் கஷ்டப்படுவதாகவும், மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவதே மிக கஷ்டமாக உள்ளதாகவும், அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் பெறுவது போல ஒரு பாட்டில் வாங்குவதற்கே நேரமாகிறது என்றும்  தனியரசு எம்எல்ஏ பேசியதால், பேரவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய தனியரசு எம்எல்ஏ, ‘வடநாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டிப்பார்த்தனர். எட்டிப்பார்த்த வடநாட்டினரை எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார். ஏழை விவசாயிகளின் செல்லப்பிள்ளை எடப்பாடி பழனிசாமி’ என்றார். மேலும், மரணத்தை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டவர் ஜெயலலிதா என்றும் தனியரசு எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close