தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்: ஸ்டாலின் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 10:04 pm
neutrino-research-center-in-theni-stalin-condemned

தேனியில்  நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேனி மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தந்தது கண்டனத்திற்குரியது. நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழல், வனவிலங்குகள், வனப்பகுதிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகர்ப்புறத்துறை அனுமதி வழங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. மக்களின் பாதுகாப்பில் சிறிதும் அக்கறையின்றி ஒப்புதல் தந்துள்ளது வேதனை அளிக்கிறது. மக்களின் பாதுகாப்பு கருதி நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு முதல்வர், துணை முதல்வர் உரிய அழுத்தம் தர வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close