தமிழகத்தில் லோக் அதாலத் தொடங்கியது

  அனிதா   | Last Modified : 13 Jul, 2019 11:22 am
lok-adalat-started-in-tamil-nadu

தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க இந்த லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றங்களில், வழக்கு விசாரணையின் போது இரு தரப்பினரையும் வரவழைத்து சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுக்காணப்படுகிறது. அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. 

இதற்காக உயர்நீதிமன்றம், கிளை நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள 2 லட்சத்து 32 ஆயிரம் வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close