அடுத்த 2 மாதத்தில் சந்திராயன் - 2 விண்கலம் தனது வேலையை தொடங்கும்: இஸ்ரோ தலைவர்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 11:43 am
isro-chief-sivan-press-meet

விண்ணில் செலுத்தப்பட்ட அடுத்த 2 மாதத்தில் சந்திராயன் - 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தை ஆராயத் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக 'சந்திராயன்-2' விண்கலம் நாளை மறுதினம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி திருமலாவில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சந்திராயன்-2 விண்கலம் வருகிற திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. விண்ணில் செலுத்தப்பட்ட அடுத்த 2 மாதத்தில் சந்திராயன் - 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தை ஆராயத் தொடங்கும். மழை பெய்தாலும் பாதிக்கப்படாத வண்ணம் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டுக்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்பம் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது” என்று கூறினார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close