மத்திய அரசின் திட்டங்களை திணிக்கக் கூடாது: தொல்.திருமாவளவன்

  அனிதா   | Last Modified : 13 Jul, 2019 03:58 pm
central-government-s-plans-should-not-be-imposed-thirumavalavan

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையதா என கேட்டறிந்து அமல்படுத்த வேண்டுமே தவிர மக்களிடம் திணிக்கக் கூடாது  என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " 8 வழி சாலை குறித்த கேள்விக்கு, மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையதா என கேட்டறிந்து அமல்படுத்த வேண்டுமே தவிர மக்களிடம் திணிக்கக் கூடாது என்றும் ஒட்டு மொத்த தமிழகமே இந்த திட்டத்தை எதிர்க்கும் நிலையில் தமிழக முதலமைச்சரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

ஆணவ படுகொலை அனைத்து ஆட்சியாளர்கள் காலங்களிலும் நடைபெற்று வருகிறது என்ற முதல்வர் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியில் மட்டும் தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று தாம் குற்றஞ்சாட்டவில்லை எனவும்,  இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து இது நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், ஆணவப்படுகொலையை  தடுப்பதற்கான  முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தனது கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார். 

மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் மாநில அரசு ஏற்றுகொள்வது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, தமிழ அரசு சுதந்திரமாக செயல்படவில்லை, மத்திய அரசின் கெடுபிடியின் கீழ் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளதாக கூறிய திருமாவளவன், இதிலிருந்து மத்திய அரசுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைக்கக் கூடிய ஒரு இக்கட்டான நிலையில் தமிழக அரசு தவித்து வருவதை நாம் உணர முடிகிறது என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close