தபால்துறை தேர்வை தமிழில் எழுதும் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் கருப்பணன்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 03:01 pm
minister-karuppanan-press-meet

தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட தபால் துறையின் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளில் வந்துகொண்டிருந்தன. 

இந்நிலையில், இனிவரும் தபால் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல் தாளுக்கான தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்றும் இரண்டாம் தாள் மட்டும் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து பதில் அளித்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், "தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். தபால்துறை தேர்வை தமிழில் எழுத முடியாதது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

அதேபோன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார். 

newstm.in



 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close