பாதைக்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது: வசந்தகுமார்!

  அனிதா   | Last Modified : 13 Jul, 2019 03:48 pm
don-t-destroy-agriculture-for-the-path-vasanthakumar-mp

பாதைக்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "8 வழி சாலை திட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு காலம்தான் பதில் கூறும் என்றும் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் நான்கு வழி சாலை அமைக்கும் போது குளத்தை மூடி அதன் மீது பாதை அமைத்து விட்டார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தற்போது தூண்கள் அமைக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. எனவே விவசாயமும் வேண்டும், பாதையும் வேண்டும். அந்த வகையில் அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

நீட் விலக்கு குறித்து மக்களவை முடிவெடுக்குமா? அல்லது உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்குமா? என்பது குறித்து தெரியவில்லை.  ராகுல் காந்தி கூறியது போன்று தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள கல்வி முறையை பின்பற்றுவது நன்றாக இருக்கும் என கூறினார். 

மேலும், பெட்ரோல் விலை உயர்வு சராசரியாக தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாக கூறிய அவர், இதனால் விலைவாசி உயரக் கூடும் என்றும், பிரதமர் மோடி ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், பணக்கார முதலாளிகளுக்கு மட்டுமே வசதிகளை செய்து தருவதாக குற்றம் சாட்டினார். அதோடு, 2019 -20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயம் சார்ந்த எந்தவித நல்லத்திட்டமும் அறிவிக்கப்படவில்லை என வசந்தகுமார்  குறிப்பிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close