சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: இருவருக்கு சம்மன்!

  முத்துமாரி   | Last Modified : 13 Jul, 2019 04:46 pm
nia-officials-raid-in-chennai

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது தொடர்பாக, நேரில் ஆஜராகும்படி இருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

சென்னை மண்ணடியில் இஸ்லாமிய ஹிண்ட் என்ற கேரள அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நாகை, சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

இதில், சென்னை மண்ணடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பென் டிரைவ் உள்ளிட்ட சில எலக்ட்ரானிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த இருவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் சென்னை கிண்டியில் உள்ள என்.ஐ.ஏ சோதனை அலுவலகத்தில் அவர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close