நேபாளத்தில் கனமழையினால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு; 23 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 07:18 pm
nepal-heavy-rain-23-dead

நேபாளம் நாட்டில் கனமழை பெய்த காரணத்தினால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 

பருவமழை காரணமாக நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பலியானோர் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன பலரை தேடும் பணியில்  மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close