அத்திவரதரை காணவரும் பக்தர்களுக்காக மருத்துவ முகாம்கள்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 08:54 pm
medical-camps-for-aththivaradhar-devotees

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி 24 மணி நேரம் இயங்கும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கையில்,  'காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக சுகாதாரத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக்குழுக்கள் - 20, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்-4, அவசரகால இருசக்கர வாகனங்கள்-10 நாளை முதல் தயார் நிலையில் இருக்கும். பக்தர்கள் செல்லும் வழிகளிலும், கோயிலைச் சுற்றிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் 3 பணிசுழற்சி முறைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர்’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close