நாளை நடைபெறும் அஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது: நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 10:07 pm
postoffice-exams-results-may-not-be-released-court

நாளை நடைபெறும் அஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என, அஞ்சல்துறை தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உயர்நீர்மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசிர்வாதம் தொடர்ந்த இந்த வழக்கில், அஞ்சல்துறை தேர்வு குறித்த அறிவிப்பை பழைய நடைமுறைப்படியே வெளியிடக் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இவ்வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், அஞ்சல்துறை தேர்வுகளை நடத்தலாம்; ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கூறி, அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் உத்தரவிட்டு இவ்வழக்கை ஜூலை 19-ஆம் தேதி ஒத்திவைத்தது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close