அத்திவரதர்: நேரம் குறைப்பு; குழந்தைகள், கர்பிணிகளை அழைத்து வர வேண்டாம்

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 04:16 pm
aththivaradhar-babies-pregnant-women-do-not-come

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என்ற நிலையில் தற்போது இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. 

கோயில் தூய்மைப்பணி, அத்திவரதரை அலங்கரித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், நேரம் குறைக்கப்பட்டதால் இரவு 9 மணிக்கு கோபுரவாசல் அடைக்கப்படும் என்றும் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

அத்திரவரதரை தரிசிக்க சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், வார நாட்களிலும் பரவலாக பக்தர்கள் வர வேண்டும் என்று ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் குழந்தைகள், கர்பிணிகள், முதியோர்களை அழைத்து வர வேண்டாம் என்று அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்திவரதரை நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டதால் தரிசன நேரம் நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் அத்திவரதரை வழிபட ஏராளமானோர் காஞ்சிபுரத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close