நாகையில் கைதான இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய என்.ஐ.ஏ!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 04:05 pm
arrested-persons-produced-in-court-by-nia

நாகப்பட்டினத்தில் கைதான இருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சென்னை பூந்தமல்லி மாஜிஸ்திரேட் முன்பாக  ஆஜர்படுத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹரிஷ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது வீடுகளில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களது வீடுகளில் செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நள்ளிரவு வரை அவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், இன்று சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் ஆஜர்படுத்தியுள்ளனர்.

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close