அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை: இந்து சமய அறநிலையத் துறை

  அனிதா   | Last Modified : 16 Jul, 2019 08:38 am
no-chance-to-relocate-the-athivarathar-hindu-religious-charity-department

அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை என இந்த சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உற்சவம் நடைபெறுவதாலும், நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதாலும், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசிக்க நேரிடுவதால் அத்திவரதரை  இடமாற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோயிக்கென உள்ள ஐதீகத்தை மாற்ற முடியாது என்றும் பக்தர்களுக்க தேவையான வசதிகள் செய்துதரப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் கோரிக்கை பற்றி இன்னும்  ஆய்வு செய்யவில்லை என்றும் அத்திவரதரை இடம்மாற்ற வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close