கைத்தறி நெசவாளர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 12:06 pm
tn-assembly-session-cm-announcements

கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் தமிழக மக்களின் பல்வேறு பிரச்னைகள், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அதன்படி, இன்றைய கூட்டத்தொடரில், பேரவை விதி 110ன் கீழ், கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

மேலும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு நெசவு செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close