தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை!

  அனிதா   | Last Modified : 16 Jul, 2019 03:35 pm
rain-for-3-days-in-tamil-nadu

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close