பேருந்து பயணிகளுக்கு ஓர் நற்செய்தி...

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 09:35 pm
electric-buses-to-be-operated-in-chennai-within-a-week

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேரவையில் இன்று அறிவித்துள்ளார். மின்சார பேருந்துகளின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், சென்னையில் 80, கோவை மற்றும் மதுரையில் தலா 10 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளால், அரசு பேருந்துகளின் விபத்துகள் ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருவதாகவும், விபத்துகள் இன்றி பணிபுரியும் ஓட்டுநர்களை ஊக்குவிக்க விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close