கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு!

  அனிதா   | Last Modified : 17 Jul, 2019 10:33 am
water-from-karnataka-dam-opens

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 855 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகா அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நாளை முதல் 5 நாட்களுக்கு குடகு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து குடகு மாவட்டத்தில் மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல் அடிப்படையில், கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி  முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கபினி அணையில் இருந்து 500 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 355 அடி தண்ணீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close