அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: தேர்தல் ஆணையம் தகவல்

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 11:16 am
local-body-election-notification-will-be-released-on-october-end

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வருகிற அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

தேர்தலை விரைந்து நடத்தக்கோரி எதிர்க்கட்சியான திமுக மற்றும் சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்  விசாரணையில் இருந்து வரும் நிலையில், இன்றைய விசாரணையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வருகிற அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close