வைகோ மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

  அனிதா   | Last Modified : 18 Jul, 2019 09:40 am
vaiko-appeal-petition-hearing-today

தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

2009ஆம் ஆண்டு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஒரு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close