மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூட கூடாதெனில் வேறு வழி என்ன? செங்கோட்டையன்

  அனிதா   | Last Modified : 18 Jul, 2019 12:27 pm
what-is-the-other-way-to-not-close-the-school-minister-sengottaiyan

ஒரு மாவணர் கூட இல்லாத அரசு பள்ளிகளை மூட கூடாது என்றால் அதற்கு வேறு என்ன தீர்வு உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின் போது, அரசு பள்ளிகளை மூடுவதை நிறுத்திவிட்டு நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கம் தென்னரசு கூறினார். 

இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  அரசு பள்ளிகளை மூட வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல என்றும் ஒரு மாணவர் கூட இல்லாத 48 பள்ளிகளையே நூலகமாக மாற்ற தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகளை மூட கூடாது என்றால் அதற்கு தீர்வு என்ன? என கேள்வி எழுப்பிய அமைச்சர், வேறு வழி இருந்தால் சொல்லும் படி கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close