பி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2019 04:56 pm
b-ed-tomorrow-the-first-application-distribution

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பி.எட்., படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. 

சென்னை வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், பி.எட்., கலந்தாய்வை நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. ஜூலை 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு ரூ.500, மற்ற பிரிவு ரூ.250. 

மேலும் விவரங்களை www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close