அதிமுக வேட்பாளரின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு?

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 01:46 pm
vellore-election-nomination-review-stopped-for-admk-candidate

வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. 

ளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததால், அங்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதற்கான மறுதேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்று, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. 

இதில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சித் தலைவர்  ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close