10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 01:49 pm
public-exam-time-table-released

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது . 

அதன்படி, 12ம் வகுப்பு தேர்வுகள் 2020ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. 11ம் வகுப்பு தேர்வுகள் 2020ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. 

அதேபோன்று 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. 

தேர்வு முடிவுகள் 12ம் வகுப்பிற்கு ஏப்ரல் 24ம் தேதியும், 11ம் வகுப்பிற்கு மே 14ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு மே மாதம் 4ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close