காவல் ஆளிநர்களுக்கு எரிபொருள் படி வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 05:02 pm
fuel-to-be-given-to-police-personnel-cm-announcement

72,000 காவல் ஆளிநர்களுக்கு எரிபொருள் படி வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.30 கோடி செலவினம் ஏற்படும் என்றும்  பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமிஅறிவித்துள்ளார்.

மேலும், ‘சட்டம், ஒழுங்கு அலகுகளுக்கு, உடல் இணை புகைப்பட கருவி மற்றும் ஆளில்லா விமானங்கள் ரூ.1.38 கோடியில் வாங்கப்படும். ரூ.14.75 கோடியில் 5 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.97.74 லட்சம் செலவில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்படும். 1,500 தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்காப்பு சாதனங்களுடன் கூடிய உடைகள் வாங்கப்படும். காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பரிசீலனைக்கு பின் காவல்துறை ஆணையம் அமைப்பது பற்றி முடிவு செய்யப்படும். தீ விபத்து நேரங்களில் வானிலிருந்து கண்காணிக்க ரூ.1 கோடி செலவில் ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும்’ என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close