கடத்தப்பட்ட குழந்தை 8 மணி நேரத்தில் மீட்பு: பணியாட்கள் குறித்தும் விசாரியுங்கள்

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 06:14 pm
chennai-amaintakarai-doctor-kidnapped-child-was-recovered-in-8-hours

சென்னை அமைந்தகரையில் கடத்தப்பட்ட மருத்துவரின் குழந்தை 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

மருத்துவர் அருள்ராஜின் இரண்டரை வயது குழந்தை நேற்று கடத்தப்பட்டதாகவும், தனியார் பள்ளியில் படித்து வந்த குழந்தையை வீட்டில் வேலை செய்யும் பெண் கடத்திச் சென்றதாகவும், குழந்தையின் தந்தை அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், கடத்தப்பட்ட குழந்தை 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டி குழந்தையை பணிப்பெண் கடத்தியுள்ளார் என்று கூடுதல் காவல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், பணிப்பெண் பற்றிய விவரங்களை குழந்தையின் பெற்றோர் வாங்கவில்லை என்றும், பணியாட்களை வேலைக்கு சேர்க்கும் போது அவர்களின் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் கூடுதல் காவல் ஆணையர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close