காரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 20 Jul, 2019 08:58 am
110-kg-of-ganja-seized-from-car

ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு காரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய 110 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காரில் வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த மதன், கோபிநாத் ஆகியோரை கைது செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close