தமிழகம் வந்தடைந்தது காவிரி நீர்!

  அனிதா   | Last Modified : 20 Jul, 2019 01:10 pm
cauvery-water-arrives-in-tamil-nadu

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல்லை வந்தடைந்தது. 

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகா அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல் அடிப்படையில், கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த 17 ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கலை இன்று வந்தடைந்தது. விவசாயிகள் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பளித்தார். காலை நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close